| குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் புல்லாளப்பட்டி கிராம மக்கள் Dinamalar
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் புல்லாளப்பட்டி கிராம மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:23

தர்மபுரி: பாலக்கோடு யூனியன், புலிக்கரை பஞ்., க்கு உட்பட்ட புல்லாளப்பட்டியில், 130 வீடுகள் உள்ளது. இக்கிராமத்திற்கு, இரண்டு நாளுக்கு ஒரு முறை வரும், ஒகேனக்கல் குடிநீர், ஒரு வீட்டிற்கு நான்கு குடங்கள் மட்டும் கிடைக்கிறது. இங்கிருந்த இரண்டு சிறுமின்விசைப்பம்பு போர்வெல்லும் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் இப்பகுதியினர் அருகில் விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்காதவர்கள், பணம் கொடுத்து டிராக்டர் குடிநீரை வாங்கும் நிலையும் தொடர்கிறது. குடிநீர் தேவை குறித்து, பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஒகேனக்கல் குடிநீர் கூடுதல் அளவு வழங்கவும், சிறுமின்விசை பம்பு போர்களை பழுதை சரி செய்யும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X