| பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடத்துக்கு பூட்டு Dinamalar
பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடத்துக்கு பூட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:24

பாலக்கோடு: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு, சில ஆண்டுகளுக்கு முன், இலவச கழிப்பறை அமைக்கப்பட்டது. இதை பராமரிக்க, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால், இற்கு பூட்டு போடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் வரும் நெடுந்தூர பஸ்கள் சில நிமிடங்களில் புறப்பட்டு செல்வதால், கட்டண கழிப்பறைக்கு செல்லும் பயணிகள் தாங்கள் வந்த பஸ்சை தவற விட்டு அவதி அடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பஸ் ஸ்டாண்ட் வரும் பெரும்பாலான பயணிகள் புகார் தெரிவித்த போதும், அவர்கள் இலவச சீறுநீர் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இலவச சிறுநீர் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X