| ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:26

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி லோக்சபா தொகுதி மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தேர்தல்கள், வரும், 18ல், நடக்க உள்ளது. இதற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. இதை, தேர்தல் அலுவலர் கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த நான்கு நாட்களாக, லோக்சபா தொகுதி வேட்பாளர்களுக்கு சின்னம் பொருத்தும் பணிகள் நடந்தது. நேற்று காலை முதல், அருர் (தனி) பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கான சின்னம், பெயர் மற்றும் புகைப்படம் பொருத்தும் பணிகள் நடந்தன. இதில், அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், மின்னணு இயந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. தொடர்ந்து, அருகில் இருந்த தனி அறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட்டன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X