| 3 மாதமாக குடிநீரின்றி மக்கள் தவிப்பு Dinamalar
3 மாதமாக குடிநீரின்றி மக்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:26

கிருஷ்ணகிரி: மூன்று மாதங்களாக மோட்டார் பழுதை சரி செய்யாததால், மேலூர் கிராமத்தினர், குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., மேலூர் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு போர்வெல் குழாயில் இருந்து, தண்ணீர் எடுத்து மேல்நிலை தொட்டி மூலம், குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், போர்வெல் மோட்டார் பழுதால், தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால், 2 கி.மீ., தூரம் சென்று, குடிநீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து பஞ்., கிளார்க் மோகன், ஆப்பரேட்டர் சண்முகம் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை கும்மனூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பத்து நாளில் மோட்டார் பழுதை நீக்கி, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, பஞ்., கிளார்க் கூறிவிட்டு சென்று, இரண்டு மாதங்கள் ஆகிறது. தண்ணீர் இருந்தும், மோட்டாரின்றி குடிநீர் எடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X