கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரம் மற்றும் ஒன்றியம் பகுதியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், எஸ்.ஹெச்.அமீன் முன்னிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாரை ஆதரித்து, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்., வேட்பாளருக்கு, கை சின்னத்தில் ஓட்டு சேகரித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களை சந்தித்து, ராகுல் பிரதமராக, கை சின்னத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தலைமையில், தொழிலதிபர் மதியழகன், ஆறுமுகம், டேம் வெங்கடேசன், அஸ்லம் பாஷா, மூர்த்தி, ஆட்டோ நீலு, டிஷ் டிவி பரீத், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான, தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.