| ஓசூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Dinamalar
ஓசூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:29

ஓசூர்: ஓசூர், அ.தி.மு.க., வேட்பாளர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


ஓசூர் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, பாகலூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள, அவரது சிலைக்கு நேற்று காலை மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஓசூர் சுற்று வட்டார மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான, 4,300 பேருக்கு பட்டா வழங்க, முதல்வர் பழனிசாமியிடம் பேசி, வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வே செய்து, பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 50க்கும் மேற்பட்ட இடங்களில், புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் மலர்களுக்கு, மலர் ஏற்றுமதி மையம் அமைக்கப்பட உள்ளது என, பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, ஓட்டு சேகரித்தார். அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டிக்கு ஆதரவாக, ஓசூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராமன் தலைமையில், பாகலூர், எம்.ஜி.ஆர்., நகர், ராகவேந்திரா நகர், காவேரி நகர், மக்கம்பேட்டை, கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X