| இறந்த வீரர்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அஞ்சலி Dinamalar
இறந்த வீரர்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:43

கரூர்: கரூர் தீயணைப்பு துறை நிலையத்தில், மறைந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி நடந்தது. கடந்த, 1944ல், மஹாராஷ்ட்டிரா மாநிலம், மும்பை கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த கப்பலில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்த சென்ற, 64 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல், 14ல், நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையத்தில், நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதில், மாநில அளவில் தீயணைக்கும் பணியின் போது, இறந்த வீரர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கரூர் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர் கணேசன், கரூர் தீயணைப்பு அலுவலர் விஜயகுமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X