| தடுப்புச்சுவர் சேதம்: விவசாயிகள் அவதி Dinamalar
தடுப்புச்சுவர் சேதம்: விவசாயிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:47

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், திம்மராவுத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து, உஞ்சனை கிராமம் வரை, மூன்று கிலோ மீட்டருக்கு சிறிய ஓடை செல்கிறது. தண்ணீர் வரத்தாகும்போது, சுற்றியுள்ள விவசாய நிலங்களில், சாகுபடி செய்து, பயனடைந்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர். இதனால், மழைக் காலங்களில் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்யமுடியாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே, 'தடுப்புச்சுவரை புதுப்பிக்க வேண்டும்' என, சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X