| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:47

ஆடுகளால் தொல்லை; விபத்து வாய்ப்பு: சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து பகுதி மக்கள் வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கின்றனர். சீராப்பள்ளி, வெங்கச்சன்கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் திடீர், திடீரென சாலைக்கு நடுவே வந்து விடுகின்றன. கும்பலாக வரும் ஆடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க, ஆடு, மாடுகளை சாலையில் விடுவதை தடுக்கும் விதமாக கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.


வடிகால் அடைப்பு சரி செய்யப்படுமா? குமாரபாளையம், சின்னப்பநாயக்கன் பாளையம் வாரச்சந்தை நுழைவுப்பகுதி அருகே, அப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி குளம் போல் உள்ளது. இதனால் வீசும் துர்நாற்றம், இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களை பெரிதும் பாதிப்படைய வைக்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. பலருக்கும் தொற்று நோய் பரவ காரணமாக இருக்கும், இந்த கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தண்ணீர் வசதியில்லாத அங்கன்வாடி மையம்: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வசதியாக, மையம் அருகிலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது, இதில் தண்ணீ வருவதில்லை. இதனால், சாலையை கடந்து தண்ணீர் பிடிக்க செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள் வசதிக்காக பழைய குடிநீர் இணைப்பில், தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மண் சாலையால் பகுதியினர் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், சேர்வாம்பட்டி அருந்ததியர் தெருவில் உள்ள சாலை, பல மாதங்களாக மண் சாலையாக உள்ளது. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், பகுதியினர் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். வெயில் காலங்களில், சாலை முழுவதும் புழுதி படர்ந்து விடுகிறது. எனவே, மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை.


குப்பை எரிப்பால் மூச்சுத்திணறல்: நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் இருந்து, துறையூர் சாலைக்கு செல்லும் வகையில், ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலை அமைந்துள்ளது. அருகில், தேவேந்திரன் தெருவில் துவக்கப்பள்ளி, சமூதாயகூடம், ரேஷன்கடை ஆகியவை உள்ளன. அருகே, பல்வேறு பகுதியில் சேகரிக்கும் குப்பை குவித்து, தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதனால், பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X