| பூட்டை உடைத்து நகை கொள்ளை Dinamalar
பூட்டை உடைத்து நகை கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:52

குமாரபாளையம்: குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் அருகே உள்ள அமிர்தா நகரில் வசிப்பவர் செல்வராஜ், 58. ஜவுளி வியாபாரி. இவர் கடந்த, 9ல், மதியம், 1:30 மணியளவில் தனது மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக வெளியூர் சென்று விட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அருகே வசிப்பவர்கள் போன் மூலம் தகவல் தந்தனர். அதன்படி வீட்டினுள் சென்று பார்த்த செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார். பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ், தாலிக்கொடி, செயின் என, ஏழு பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, 65 ஆயிரம் ரூபாய். குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X