| 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு Dinamalar
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:52

நாமக்கல்: தமிழகத்தில் வரும், 18 ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என, தேர்தல்ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, பேரணி, நாடகம், துண்டுபிரசுரம் வினியோகம், மனித சங்கிலி என, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், நாமக்கல் மாவட்டம் முழுவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல், தனியார் அமைப்புகள், பொதுமக்கள், 100 சதவீதம் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, நாடகம், கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, 'அனைவரும் வாக்களிப்போம்; ஐனநாயத்தை காப்போம்' என்ற முழக்கத்துடன், 100 சதவீதம், நேர்மையான ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல் உழவர் சந்தையில், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தினர். அப்போது, 'சித்திரையில், தமிழ் திருவிழா நடக்கிறது. அதைவிட, இந்த சித்திரையில், நம் நாட்டின் ஐனநாயகத் திருவிழாவில் கலந்து கொண்டு, நம் உரிமையை நிலை நாட்டுவோம் என, வலியுறுத்தப்பட்டது. உழவர் சந்தையில் துவங்கிய பேரணி, கோட்டைச்சாலை, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், மோகனூர் சாலை வழியாக சென்று, ஐயப்பன் கோவிலில் முடிந்தது. இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் ரங்கநாதன், டாக்டர்கள் ரவி, லீலாதரன், பல்வேறு அமைப்பினர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X