தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகளுக்கு, குடிக்க குடிநீர் கிடைப்பதில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பஸ் ஸ்டாண்டுகளில், இதே நிலை தான். தேர்தல் நடத்தை விதியால், அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள், தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை. மக்கள் கூடும் இடங்களில், அரசு சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து, தாகம் தீர்க்க வேண்டும்.
- எம்.சவுந்தரராஜன், சென்னப்பள்ளி.