வாகன நெரிசல்; மக்கள் தவிப்பு: ஓசூர் தாலுகா அலுவலக அண்ணா சிலை அருகே, நான்கு சாலைகள் ஒன்றாக சந்திக்கின்றன. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல்கள் இதுவரை இயங்கவில்லை. சாலை தோண்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல, சாலை குறுகி, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சுகாதார வளாகம் திறப்பது எப்போது? கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., மேலூரில், கடந்த 2004ல், ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை, 2012ல், 1.96 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். ஆனாலும் இன்று வரை சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தை உடனே திறக்க வேண்டும்.