| தட்டுப்பாடு .. அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் . . . சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி Dinamalar
தட்டுப்பாடு .. அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் . . . சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 ஏப்
2019
01:57
பதிவு செய்த நாள்
ஏப் 18,2019 00:57

மதுரை : வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர். சராசரியாக 2500 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். 7500 பேர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். தற்போது இம்மருத்துவமனையில் முக்கிய நோய்களுக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மருந்தகத்தில் கிடைப்பதில்லை. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். வேறு வழியின்றி தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட இடைவெளியில் மாத்திரைகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திடம் கொள்முதல் செய்வது வழக்கம். முன்கூட்டியே தேவையை கணித்து மாத்திரைகளை வாங்குகிறோம். தற்போதைய தேவையை சமாளிக்க 28 லட்சம் ரூபாய்க்கு மருந்துக்களின் பட்டியலை அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.


தங்களிடம் மருந்துகள் இல்லை என மருத்துவ சேவை கழகத்தினர் தெரிவித்தால் தான் தனியாரிடம் கொள்முதல் செய்ய முடியும். மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. விரைவில் நிலைமை சரியாகும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X