கள்ளழகர் திருவிழாவிற்காக நாளை போக்குவரத்து மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
01:31

மதுரை : மதுரையில் நாளை (ஏப்., 19) அதிகாலை 5:45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதால் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடங்கள் குறித்து போலீசார் அறிவித்துள்ளனர். ஏ.வி., மேம்பாலம், ராமராயர் மண்டபம், யானைக்கல் புதுப்பாலம், ராமராயர் மண்டபம், தென்கரை வழி வாகனங்கள் ஓபுளாபடித்துறை, ஏ.வி., செல்லுார் பாலம் வழி வடகரைக்கு செல்ல அனுமதியில்லை. ஓபுளா படித்துறை, வைகை தென், வடகரையில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது .


புது நத்தம், அழகர்கோவில், மேலுார் ரோட்டிலிருந்து கீழவாசல், சிம்மக்கல் வழி செல்ல வேண்டிய நகர பஸ்கள், கனரக வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், நத்தம் ரோடு, அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர், ஆவின், சுகுணா ஸ்டோர், பி.டி.ஆர்.,பாலம், மருதுபாண்டியர் சிலை, காமராஜர் சாலை, முனிச்சாலை, பழைய குயவர்பாளையம், செயின்ட் மேரீஸ், தெற்குவெளி வீதி வழி செல்ல வேண்டும்.


பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புது நத்தம், அழகர்கோவில், மேலுார் ரோடு செல்லும் வாகனங்கள் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மகால் ரோடு, கீழவாசல், காமராஜர் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, ஆவின், கே.கே.நகர், மேலுார் 120 அடி ரோடு வழி செல்ல வேண்டும். தத்தனேரி ரோட்டிலிருந்து பழங்காநத்தம், அழகர்கோவில், மேலுார் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள். எல்.ஐ.சி சந்திப்பு, குலமங்கலம், செல்லுார் 60 அடி, பி.டி.ராஜன் ரோடு வழி செல்ல வேண்டும்.


கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் நான்கு, இருசக்கர வாகனங்களை டாக்டர் தங்கராஜ் சாலை, ரேஸ் கோர்ஸ் ரோடு, ஓ.சி.பி.எம்., பள்ளி, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன், தெற்கு, வடக்கு மாசி வீதிகள், ஒர்க்ஷாப் ரோட்டில் நிறுத்தலாம். நகருக்குள் கீழவெளி வீதி முதல் கீழவாசல் வரை, கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்துாண் வரை, வடக்குமாசி வீதிகளில் வாகனம் நிறுத்தலாம். பச்சை அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன், காமராஜர் சாலை, கீழவாசல், கீழமாரட் வீதி, நெல்பேட்டை, அண்ணா சிலை, ஏ.வி., பாலம் வடக்கு, யானைக்கல் சந்திப்பு வழி வந்து ஏ.வி., பாலம் தெற்கு பகுதியில் கார்களை நிறுத்தி, ஏ.வி.,பாலம் வடக்கு, கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி.,பாலம் தெற்கு, அண்ணா சிலை வழி வெளியேற வேண்டும்.


ரோஸ் அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு வலதுபுறம், பனகல் ரோடு, அரசு மருத்துவமனை எதிரேயுள்ள மினி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி, பனகல் ரோடு வழி வெளியேற வேண்டும்.மஞ்சள் அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு வலதுபுறம் வழி வந்து அண்ணா பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி ஆவின் சந்திப்பு வழி வெளியேற வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X