ஒரே பெயர் பல இடங்களில் பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
05:34

பல்லாவரம்: வாக்காளர் பட்டியலில், ஒரே பெயர், பல இடங்களில் பதிவாகி உள்ளதாலும், சிலரது புகைப்படங்கள் மாறியுள்ளதாலும், வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஒவ்வொரு தொகுதியிலும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.அப்படி இருந்தும், வழக்கம்போல், இறுதி பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் காண முடிகிறது. பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, 13வது வார்டு, ஜெயலட்சுமி நகர், பாகம் எண்: 287 என்ற வாக்காளர் பட்டியலில், திருத்தங்கள் செய்யுமாறு, அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன.ஒருவரது பெயர், மூன்று இடங்களிலும், நான்கு பேரின் பெயர்கள், இரண்டு இடங்களிலும் பதிவாகியுள்ளன. முகவரி மாற்றம் செய்த, 15 பேரின் பெயர்கள், பழைய முகவரியிலேயே உள்ளன.முனுசாமி என்பவர், இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், வாக்காளர் பட்டியலில், அவரது பெயரும், வேறு ஒருவரின் புகைப்படமும் பதிவாகியுள்ளது. இந்த குளறுபடிகளால், அப்பகுதி வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.அப்பகுதி வாக்காளர்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், இதே குளறுடிகள் இருந்தன. அப்போது, எழுத்து மூலமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, புகார் கொடுத்தோம்.புகாரை வாங்கிய அதிகாரிகள், அதில் உள்ள குளறுபடிகளை மாற்றி, சரியான பட்டியல் வெளியிடுவதாக கூறினர்.ஆனால், புதிய வாக்காளர் பட்டியலிலும், இக்குளறுபடி தொடர்கிறது. இந்த அலட்சியத்தால், எங்கள் பகுதி வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X