உடுமலை தொகுதியில் ஓட்டுப்பதிவு 71.61 சதவீதம்!மடத்துக்குளத்தில் 72.35 சதவீதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
00:05

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டுச்சாவடிகளில் காலை நேரத்தில் ஆண்கள் அதிகளவு பதிவு செய்த நிலையில், மதியத்திற்கு பிறகு பெண்கள் ஓட்டுப்பதிவு அதிகரித்து, வழக்கம் போல் முந்தினர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 16 ஆண்கள், ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து 662 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 22 என, 2 லட்சத்து, 57 ஆயிரத்து 700 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.


மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து 934 ஆண்கள், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 136 பெண்கள், 116 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 37 ஆயிரத்து, 86 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.உடுமலை தொகுதியிலுள்ள, 295 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது.காலையிலேயே, நகரம், கிராமம் என அனைத்து ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.


இரண்டு மணிநேரத்தில், ஏறத்தாழ, 10 சதவீதம் பேர் இரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து, விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.மதியம், ஒரு மணி நிலவரப்படி, உடுமலை தொகுதியில், 31.33 சதவீதமும், மடத்துக்குளத்தில் 38.72 சதவீதமாக ஆக இருந்தது.மதியம் வரை பெண்களை விட ஆண்களே அதிகளவு ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். அதே போல், உடுமலை தொகுதியை விட மடத்துக்குளம் தொகுதியில், வாக்காளர்கள் அதிகளவு ஓட்டளித்திருந்தனர்.மதியம், 3:00 மணிக்கு, உடுமலை தொகுதியில் 63.41 சதவீதமாகவும், மடத்துக்குளத்தில் 52 சதவீதமாக இருந்தது. மதியத்திற்கு மேல், மடத்துக்குளம் தொகுதியை விட, உடுமலை தொகுதி முந்தியது.மாலை, 5:00 மணிக்கு, உடுமலையில், 63.44 சதவீதம் ஓட்டுப்பதிவும், மடத்துக்குளத்தில், 66.78 ஆக இருந்தது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் வருகை குறைவாக இருந்தது. கிராமங்களை அதிகளவு கொண்ட மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டு சதவீதம் அதிகரித்தது.


உடுமலை தொகுதிக்குட்பட்ட, சின்னவீரம்பட்டி, கச்சேரி வீதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னையால், ஓட்டுப்பதிவு சற்று தாமதித்தது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அமைந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அதிகரித்தது. புதுப்பாளையம் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு முடியும் போது, மின்தடை ஏற்பட்டது. இதனால், பதிவான ஓட்டுகள் கணக்கிடுவது உட்பட பணிகளில் தாமதம் ஏற்பட்டது.


இறுதி நிலவரம்


உடுமலை தொகுதியில், 91 ஆயிரத்து 369 ஆண்கள்; 93 ஆயிரத்து 177 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மூன்று பேர் என, ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து 549 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 71.61.மடத்துக்குளம் தொகுதியில், 85 ஆயிரத்து, 350 ஆண்கள்; 86 ஆயிரத்து, 204 பெண்கள் என, ஒரு லட்சத்து, 71 ஆயிரத்து 554 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 72.35.ஓட்டுக்கள் பதிவான ஓட்டுப்பெட்டிகள், பூத் ஏஜன்ட்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மையமான, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X