திருப்பூர் தொகுதியில் ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பு! இளம் வாக்காளர்கள் காட்டிய ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஏப்
2019
01:18
பதிவு செய்த நாள்
ஏப் 19,2019 00:59

திருப்பூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - இ.கம்யூ., - அ.ம.மு.க., - ம.நீ.மை., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட, 12 பேர் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடந்தது.திருப்பூர் லோக்சபா தொகுதியில், அதிகாலை முதலே ஓட்டுப்பதிவு, 'சூடு' பிடிக்க துவங்கியது.


பெண்கள், முதியோர், இளைஞர்கள் என, அனைத்து தரப்பினரும், அதிகாலை, 6:30 மணி முதல், ஓட்டுச்சாவடிகளில் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாதிரிஓட்டுப்பதிவு முடிந்ததும், ஆர்வத்துடன் சென்று ஓட்டளித்தனர். தெற்கு தொகுதியில், காலை, 6:30 மணிக்கே, வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்துவிட்டனர். வெயில் கொளுத்தும் என்ற அச்சத்தில், அதிக அளவு முதியோர்களும், காலையிலேயே ஓட்டளிக்க வந்துவிட்டனர்.


பல்லடம் சட்டசபை தொகுதி, மங்கலம் அக்ரஹாரபுத்துார் சாவடியில், ஓட்டுப்பதிவு துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதாகி நின்றது; மீண்டும் பதிவான ஓட்டுக்களை சரிபார்த்து, அரைமணி நேரத்துக்கு பிறகு, இயந்திரம் சரிசெய்து, ஓட்டுப்பதிவு துவங்கியது.


'பூத் சிலிப்' இல்லாத வாக்காளரை, ஓட்டளிக்க அனுமதிக்காததால், சில சாவடிகளில் பதட்டம் ஏற்பட்டது. மண்டல அலுவலர்கள் மூலமாக, உத்தரவு வந்த பிறகு, 'பூத் சிலிப்' இல்லாத வாக்காளர்கள், அடையாள ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளித்தனர்.சிரமப்பட்ட வாக்காளர் திருப்பூர் வடக்கு தொகுதி, ஓட்டுச்சாவடி (எண்: 288)யில், 'வீல் சேர்' வசதியில்லாததால், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க செல்ல, சிரமப்பட்டனர்; சிலர் தவழ்ந்து சென்று ஓட்டளித்தனர்.


வேலன் நகர், காட்டுவளவு, யுனிவர்சல் பள்ளி, ரோட்டில் இருந்து உயரமாக இருப்பதால், வயது முதிர்ந்த வாக்காளர், பள்ளி வளாகத்திற்குள் செல்ல சிரமப்பட்டனர்.


வெள்ளியங்காடு ஓட்டுச்சாவடியில், 147 ஓட்டு பதிவான பிறகு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இருந்த, 'பேட்டரி' பழுதானது; புதிய 'பேட்டரி' மாற்றி, 45 நிமிடங்களுக்கு பிறகு, தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது; அடுத்து, 228 ஓட்டு பதிவான பிறகு, மீண்டும் 'பேட்டரி' பழுதாகி, அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு, புதிய ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதனால், கூடுதலாக, 45 நிமிடம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென, கட்சியினர் வலியுறுத்தினர்.


கட்சியினர் வாக்குவாதம்கருப்பகவுண்டம்பாளையம் ஓட்டுச்சாவடி மையத்தில், பா.ஜ., - தி.மு.க., வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டளிக்க வரும் வாக்காளரிடம் ஆதரவு திரட்டக்கூடாது என, போலீசார் தடுத்தனர்.



திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குமார் நகர் மாநகராட்சி பள்ளி, முருகம்பாளையம் ஈடன் கார்டன் பள்ளி, பிஷப் பள்ளியில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர். கலெக்டர் பழனிசாமி பிஷப் பள்ளியில் ஓட்டளித்தார்.


அங்கேரிபாளையத்தில் உள்ள வெங்கமேடு பள்ளியில் காலை, 7:00 மணிக்கு முன்னதாகவே, ஓட்டளிக்க மக்கள் வரிசையில் நின்றனர்.


பிச்சம்பாளையம், போயம்பாளையத்தில் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டளித்தனர். குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் முறை ஓட்டளிக்கும், வாலிபர்கள் ஓட்டளிக்க ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.


பூலுவபட்டி, சமத்துவபுரம், கணக்கம்பாளையம், கூலிபாளையத்தில் வெயிலுக்கு முன்னதாகவே வந்து பொதுமக்கள் ஓட்டு போட்டு சென்றனர். அதனால், 11:00 மணிக்கு பெரியளவில் மக்கள் கூட்டம் இல்லை. சில மையத்தில், ஓட்டு போட மக்கள் வராத காரணத்தால், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் 'ரிலாக்' சாக அமர்ந்திருந்தனர். அனுப்பர்பாளையம், நெருப்பரிச்சல் பகுதியில் மையத்தில், இரண்டு 'பூத்' களில் மெஷின் கோளாறு காரணமாக, பத்து நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.


விரைவாக சீரமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்தது.ஓட்டளித்தனர். திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் அடங்கியுள்ள ஜெய்வாபாய் பள்ளியில் உள்ள ஒரு ஓட்டுச் சாவடியில் நேற்று மாலை ஓட்டுப்பதிவுக்கான நேரம் முடிவடைந்த நிலையில், 30 வாக்காளர்கள் தங்கள் ஓட்டு செய்ய வரிசையில் காத்திருந்தனர்.


இதில் 64ம் எண் ஓட்டுச் சாவடியில் அவர்களுக்கு ஓட்டுச் சாவடி அலுவலர்கள் டோக்கன் வழங்கினர். அதன்பின், அனைவரும் ஓட்டளித்தனர். திருப்பூர் லோக்சபா தேர்தல் செலவின பார்வையாளராக சிட்னி டிசெல்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


நேற்று அவர் திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஓட்டுச் சாவடிகளில் நேரில் சென்று ஓட்டுப்பதிவைப் பார்வையிட்டார். திருப்பூர் அரண்மனைப்புதுார் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில், ெஷரீப் காலனியைச் சேர்ந்த வெள்ளிவேல், 57, என்பவர் நேற்று காலை ஓட்டளிக்க வந்தார்.


பார்வையிழந்த அவரை, அவரது குடும்பத்தினர் வழி நடத்தி ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வந்தனர். பிரெய்லி முறையிலான பேலட் ஷீட் மூலம் அவர் தான் ஓட்டளிக்க விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்து, ஓட்டளித்தார்.மெஷினில் கோளாறுதிருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட விஜயாபுரம் பகுதியில் இரு பள்ளிகளில் நான்கு ஓட்டுச் சாவடிகள் உள்ளன.



இதில், 231 ஓட்டு சாவடியில், காலை 10:00 மணியளவில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது.இதனால், மண்டல தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்து, மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் வரவழைத்து, ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின் மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. இதனால், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.


பழுதான ஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்த முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, ஓட்டு எண்ணிக்கையின் போது இதில் பதிவான ஓட்டுகளும் எண்ணிக்கையில் சேர்க்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.சிக்கன் விற்பனை 'தூள்'ஓட்டுப்பதிவு தினமான நேற்று திருப்பூரில் சிக்கன், மட்டன் கடைகள் திறந்திருந்தன.


அனைத்துக் கடைகளிலும் காலை முதல், சிக்கன், மட்டன் வாங்க கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'வழக்கமாக, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில்தான் இறைச்சி விற்பனை அதிகமாக காணப்படும். நேற்று ஞாயிறு தினம் போல், கூட்டம் இருந்தது. விற்பனை அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, மட்டன் கடைகளில் கூடுதல் ஆடுகள் வெட்டப்பட்டன. சிக்கன் கடைகளிலும் கூடுதல் கோழிகள் வரவழைக்கப்பட்டன' என்றார். மீன் விற்பனையும் நேற்று அதிகரித்திருந்தது.



- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X