துவக்கம் .. இன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் ... மே 19 வரை தி.மு.க ., அ.தி.மு.க., ரொம்ப 'பிஸி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஏப்
2019
02:29
பதிவு செய்த நாள்
ஏப் 19,2019 01:09

மதுரை : திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் லோக்சபா தேர்தல் நேற்று முடிந்த நிலையில், இன்று (ஏப்.,19) முதல் இடைத்தேர்தல் பணிகளை அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் துவங்குகின்றன.திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலை சந்திக்கிறது. கடந்த 2016ல் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல், உடல்நலக்குறைவால் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே இறந்தார். இதனால் அதே ஆண்டில் நவ.,19ல் இடைத்தேர்தல் நடந்தது.


இதில் அ.தி.மு.க., போஸ் வெற்றி பெற்றார். கட்சி அங்கீகார கடிதத்தில் இருந்தது ஜெ., கை ரேகை இல்லை எனக்கூறி தி.மு.க., சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் உரிய ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கடந்தஆண்டு உடல்நலக்குறைவால் போஸ் இறந்தார். வழக்கு காரணமாக இத்தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளிபோனது. இந்நிலையில் மார்ச் 22ல் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அ.தி.மு.க., வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டதோடு, தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்ககோரிய டாக்டர் சரவணனின் மனுவையும் தள்ளுபடி செய்தது.


இதைதொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., சார்பில் சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். இவ்விரு கட்சிகளுக்கும் நேரடி போட்டி உள்ளதால் பிரசாரம் 'கடுமையாக' இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இரு கட்சியினரும் இன்றுமுதல் இடைத்தேர்தல் பணிகளை துவக்க உள்ளனர். மே 17 பிரசாரம் முடியும் வரை தென்மாவட்டங்களைச் சேர்ந்த தங்களை கட்சியினரை களம் இறக்க இரு கட்சிகளும் முடிவுசெய்துள்ளன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X