| ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம் Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஏப்
2019
05:23
பதிவு செய்த நாள்
ஏப் 20,2019 02:13

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரிகளை சுற்றிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு 970 ஓட்டுச்சாவடி மையங்களிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு 27 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுப் பதிவு முடிந்தபிறகு, ஓட்டுச்சாவடி மையங்களில் இருந்து லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியிலும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 2 கல்லுாரிகளிலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும், லாஸ்பேட்டை பகுதியை சுற்றிலும், துணை ராணுவப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.இரவு 12:00 மணிக்கு மேலும், லாஸ்பேட்டை பகுதிகளில் உள்ள சாலை சந்திப்பு சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் உயரதிகாரிகள் அவ்வபோது, நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X