சென்னையில் ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
02:58

சென்னை மாவட்டத்தில், 80 சதவீதம் படித்தவர்கள் இருந்தும், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும், 59.64 சதவீதம் மட்டுமே, லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டுப்பதிவானது. இது, 2014ல் பதிவான ஓட்டுகளை விட, ௨ சதவீதம் குறைவு.தமிழகத்திலேயே, அதிக வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ளனர். இங்கு, 38 லட்சத்து, 66 ஆயிரத்து, 66 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், சென்னை மாவட்டத்தில், 60 முதல், 62 சதவீதம் ஓட்டுகள் பதிவாவது வழக்கம்.ஓட்டுப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், பல்வேறு வகையில், விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தினர்.


லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, சென்னை மாவட்டத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, தேர்தல் ஆணையம், தினமும், 64 வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதற்காக, 1.5 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. நம்பிக்கை மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில், 80 சதவீதம் பேர் படித்தவர்கள். இதனால், வழக்கத்தை விட, சென்னையில் ஓட்டுச் சதவீதம் அதிகரிக்கும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், நம்பிக்கையுடன் பணியாற்றினர்.இதற்காக, மாநிலத்தில், எந்த மாவட்டத்திலும் செய்யாத வசதிகள், சென்னை மாவட்ட வாக்காளர்களுக்கு செய்யப்பட்டிருந்தன.


அரசியல் கட்சி பிரமுகர்களால், வாக்காளர்கள் பாதிக்காத வகையில், ஓட்டுச்சாவடிகளை சுற்றி, 200 மீட்டர் சுற்றளவில், பூத் ஏஜன்டுகளை தவிர, வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பொதுமக்கள் வெயிலில் பாதிக்கப்படாதவாறு, 3,761 ஓட்டுச்சாவடி மையங்களில், ஷாமியானா பந்தல், வாக்காளர்களின் தாகம் தணிக்க, மோர், நீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், 224 ஓட்டுச்சாவடிகள், மாதிரி ஓட்டுச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன.அதிர்ச்சிபெண்கள் அதிகமுள்ள ஓட்டுச்சாவடிகளில், சட்டசபை தொகுதிக்கு ஒன்று வீதம், பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில், 16 பெண் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவில், சென்னை மாவட்டத்தில், 59.64 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவானது.இது, கடந்த ஆண்டை விட, ௨ சதவீதம் குறைவு. 2014 லோக்சபா தேர்தலில், 61.83 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .விழிப்புணர்வுஇது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: தொடர் விடுமுறை வந்ததால், ஜனநாயக கடமையை மறந்து, பல வாக்காளர்கள், வெளியூர் சென்று விட்டனர்.


இதனால், வழக்கத்தை விட, ௨ சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் சமயத்தில் தான், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, அவ்வபோது, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் வாயிலாக, பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X