குறைந்தது! வழக்கத்தை விட சென்னையில் ஓட்டுப்பதிவு.. படித்தவர்கள் ,80 சதவீதம்., ஓட்டுப்பதிவு , 59 சதவீதம் ..விழிப்புணர்வுக்காக செலவிட்ட ரூ.1.5 கோடி வீண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஏப்
2019
04:49
பதிவு செய்த நாள்
ஏப் 20,2019 03:36

சென்னை மாவட்டத்தில், 80 சதவீதம் படித்தவர்கள் இருந்தும், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும், 59.64 சதவீதம் மட்டுமே, லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டுப்பதிவானது. இது, 2014ல் பதிவான ஓட்டுகளை விட, ௨ சதவீதம் குறைவு.தமிழகத்திலேயே, அதிக வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ளனர். இங்கு, 38 லட்சத்து, 66 ஆயிரத்து, 66 வாக்காளர்கள் உள்ளனர்.ஒவ்வொரு தேர்தல்களின் போதும், சென்னை மாவட்டத்தில், 60 முதல், 62 சதவீதம் ஓட்டுகள் பதிவாவது வழக்கம்.


ஓட்டுப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், பல்வேறு வகையில், விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தினர்.லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, சென்னை மாவட்டத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, தேர்தல் ஆணையம், தினமும், 64 வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதற்காக, 1.5 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.நம்பிக்கைமேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில், 80 சதவீதம் பேர் படித்தவர்கள்.


இதனால், வழக்கத்தை விட, சென்னையில் ஓட்டுச் சதவீதம் அதிகரிக்கும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், நம்பிக்கையுடன் பணியாற்றினர்.இதற்காக, மாநிலத்தில், எந்த மாவட்டத்திலும் செய்யாத வசதிகள், சென்னை மாவட்ட வாக்காளர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சி பிரமுகர்களால், வாக்காளர்களை பாதிக்காத வகையில், ஓட்டுச்சாவடிகளை சுற்றி, 200 மீட்டர் சுற்றளவில், பூத் ஏஜன்டுகளை தவிர, வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.மேலும், பொதுமக்கள் வெயிலில் பாதிக்கப்படாதவாறு, 3,761 ஓட்டுச்சாவடி மையங்களில், ஷாமியானா பந்தல், வாக்காளர்களின் தாகம் தணிக்க, மோர், நீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


இதில், 224 ஓட்டுச்சாவடிகள், மாதிரி ஓட்டுச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன.அதிர்ச்சிபெண்கள் அதிகமுள்ள ஓட்டுச்சாவடிகளில், சட்டசபை தொகுதிக்கு ஒன்று வீதம், பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில், 16 பெண் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவில், சென்னை மாவட்டத்தில், 59.64 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவானது.இது, கடந்த ஆண்டை விட, ௨ சதவீதம் குறைவு. 2014 லோக்சபா தேர்தலில், 61.83 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.


ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புணர்வு இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: தொடர் விடுமுறை வந்ததால், ஜனநாயக கடமையை மறந்து, பல வாக்காளர்கள், வெளியூர் சென்று விட்டனர். இதனால், வழக்கத்தை விட, ௨ சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன.ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் சமயத்தில் தான், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, அவ்வப்போது, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


அதன் வாயிலாக, பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.தொகுதி வாரியாக பதிவான ஓட்டுதொகுதி மொத்த வாக்காளர்கள் பதிவான ஓட்டு சதவீதம்வட சென்னை 14,87,461 9,46,768 63.65மத்திய சென்னை 13,32,136 7,93,420 59.56தென் சென்னை 18,08,562 10,20,209 56.41பெரம்பூர் சட்டசபை தொகுதி 2,93,609 1,88,291 64.13என்ன செய்தால் சதவீதம் அதிகரிக்கும்?l எல்லா தேர்தல்களையும், இனி திங்கட்கிழமைகளில் நடத்த வேண்டும். அப்போது தான், சனி, ஞாயிறு விடுமுறை இருக்கும்.


இரண்டு நாள் விடுமுறையுடன், தேர்தல் தினத்தன்றும் விடுமுறை கிடைப்பதால், வெளியூர் வாக்காளர்கள், நெரிசல் இன்றி, மூன்று நாட்களாக பிரிந்து, ஊருக்கு செல்ல வழி கிடைக்கும்l ஓட்டுப்பதிவு தினத்திற்கு, ஒரு நாள் முன்பாகவே, அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், விடுமுறை அளிக்க வேண்டும். அப்போது தான், தொடர் விடுமுறைக்காக, சுற்றுலா செல்வதை இளைஞர்கள் தவிர்ப்பர்l வாக்காளர் பட்டியலில் குளறுபடி காரணமாக, பலரால் ஓட்டு போட முடியவில்லை. இதை ஆண்டிற்கு இருமுறை, பட்டியல் வெளியிட்டு, சம்பிரதாயமாக நடக்கும் நிகழ்வாக இல்லாமல், ஆண்டு முழுவதும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும்l


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும், முன்கூட்டியே தபால் ஓட்டு வழங்கி, அவர்கள் அனைவரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்; ஓட்டுப்பதிவுக்கு, முந்தைய இரு நாட்கள், அனைத்து அரசு பஸ்களும், இலவசமாக இயங்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்துடன் பேசி, சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்l சென்னை மாநகராட்சியை போல், ஊழியர் கட்டமைப்பு கொண்ட உள்ளாட்சி அமைப்பு, வேறு எந்த உள்ளாட்சியிலும் இல்லை. இங்கு மட்டுமே, 500 வீடுகளுக்கு, ஒரு மலேரியா பணியாளர் நியமிக்கப்படுகிறார்.


அவர்கள் மூலம், ஒவ்வொரு வீட்டிலும் வசிப்பவர்கள், அவர்கள் ஓட்டுரிமை பெற்றவர்களா போன்ற விபரங்களை எளிதில் சேகரிக்கலாம்l ஆனால், இதற்கு நேர்மாறாக, அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தால் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் வருவதில்லை. வாக்காளர் அடையாள அட்டையும், ஏக குளறுபடியாக வழங்கப்படுகிறது. இப்பிரச்னைகளை எல்லாம் களைந்தால் மட்டுமே, சென்னை மாநகரில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201902:45:37 IST Report Abuse
Ram EC has to get written clarification on each individual why they have not voted. if the reason is not valid, for five years, they shall recommend the ministry not to give any Governmental support from them. if individual is consistently not voted for next election any one state or central, his nationality shall be cancelled. I believe, If TN Seshan sits in the CEC chair, he will do without fear
Rate this:
Share this comment
Cancel
Duruvan - Rishikesh,இந்தியா
20-ஏப்-201923:10:08 IST Report Abuse
Duruvan இனிமேல் swiggy ல் ஒசி பிரியாணி கொடுத்து வீட்டிலே ஆன்லயன் மூலம் ஓட்டு போடும் option வந்தால் சோம்பேறி தமிலன் ஓட்டு போடுவான்.
Rate this:
Share this comment
Cancel
kannan - paramakudi,இந்தியா
20-ஏப்-201923:02:02 IST Report Abuse
kannan ஏதாவது ஒரு வகையில் சென்னை இல் பிரச்சனை என்றால் டிவி இல் தலைப்பு செய்தியாக வரும் ஆனால் இப்ப ஜனநாயக கடமை ஆற்ற சொன்னா அவர்களுக்கு வேற வேலை இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X