பொன்பரப்பியில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
07:33

அரியலூர்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில், இரு அரசியல் கட்சியினர், பதற்றத்தை மேலும் அதிகரித்து, ஆதாயம் தேட முயற்சிப்பது தெரியவந்துள்ளது.



அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில், இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களுக்கு இடையே, அடிக்கடி மோதல்கள் நடப்பது உண்டு. பிரிவினை வாதம் பேசுவோரும் அதிகம் உள்ளதால், பொன்பரப்பி மீது, போலீசார் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், சிதம்பரம் தனி லோக்சபா தொகுதிக்கு நடந்த ஓட்டுப்பதிவின் போது, பொன்பரப்பியில் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒரு சமூகத்தினரின், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அவர்களது இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. பலர் படுகாயம் அடைந்து, இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். பொன்பரப்பியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்.பி., சீனிவாசன், பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, அங்கு, இரு அரசியல் கட்சியினர், பதற்றத்தை மேலும் அதிகரித்து, ஆதாயம் தேட முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இந்த முயற்சியை, போலீசார் முறியடித்து வருகின்றனர்.


இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சிதம்பரம் லோக்சபா தொகுதியில், வி.சி., வேட்பாளராக, திருமாவளவன் போட்டியிட்டார். அவருக்கு, பானை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பொன்பரப்பியில், ஓட்டுச்சாவடி அருகே வைக்கப்பட்டு இருந்த பானையை, அந்த பகுதியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உடைத்துள்ளனர். இதை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பானையை உடைத்த சம்பவத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினரின் வீடுகளை சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை, மேலும் பெரிதாக்கி, குளிர் காய, இரு அரசியல் கட்சியினர், ரகசிய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அதை முறியடித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


12 பேர் கைது: பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து, வி.சி., சார்பில், குணசீலன், 30, என்பவர் கொடுத்த புகாரின்படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பா.ம.க.,வைச் சேர்ந்த, 24 பேர் மீது, அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து, 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கிராமத்தில், துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


சாலை மறியல்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ஜெயங்கொண்டம் நகரில், திருச்சி சிதம்பரம் சாலையில், வி.சி., கட்சியினர், 250 பேர், நேற்று பகல், 12:00 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஜெயங்கொண்டம் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


'இயல்பு நிலை திரும்பியது': பொன்பரப்பியில், இயல்பு நிலை திரும்பிவிட்டது. அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன; 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.


- அஷூதோஷ் சுக்லா தேர்தல் டி.ஜி.பி.,


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X