திருவிழா ! துவங்கியது புத்தக கண்காட்சி ... மடிப்பாக்கத்தில் குவிந்த வாசகர்கள் ..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2019
03:06
பதிவு செய்த நாள்
ஏப் 20,2019 23:55

சென்னை : மடிப்பாக்கத்தில், மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், புத்தகத் திருவிழா, நேற்று துவங்கியது.உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், மடிப்பாக்கம், கணேஷ் மஹாலில், புத்தகத் திருவிழா, நேற்று துவக்கப்பட்டது. நுால் கண்காட்சியை, திரைப்பட நடிகர், அருள்மணி துவக்கி வைத்தார். இயக்குனரும், எழுத்தாளருமான, ராசி அழகப்பன், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எழுத்தாளர், பசுமை குமார் முதல் விற்பனை நுாலை பெற்றுக் கொண்டார்.


புத்தக திருவிழா குறித்து, மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர், வீரபாலன் கூறியதாவது : எங்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும், 332 புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளோம். இந்த புத்தகத் திருவிழாவில், 20 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.கதை, கவிதை, வரலாறு, அறிவியல், சுய முன்னேற்றம், ஆன்மிகம், போட்டித் தேர்வு, சாகித்திய அகாடமி நுால்கள், திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.


மேலும், குழந்தைகளை கவரும் வகையிலான, ஆங்கில நுால்கள், கல்வி, அறிவியல் தொடர்பான குறுந்தகடுகள் என, 50 ஆயிரம் தலைப்புகளில், 1 கோடி நுால்கள் இடம் பெற்றுள்ளன. வரும், 29ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சி, தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அனைத்து நுால்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tickl - apdz,இந்தியா
21-ஏப்-201908:58:49 IST Report Abuse
tickl ஐயா கருத்துக் பதிவை தயவு செய்து சரியாக நிர்வாகம் செய்யுங்கள் , பதிவுகள் கணினியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X