| கீழ சித்துார்வாடியில் தண்ணீர் தட்டுப்பாடு Dinamalar
கீழ சித்துார்வாடியில் தண்ணீர் தட்டுப்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:16

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழ சித்துார்வாடி பகுதியில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கீழ சித்துார்வாடியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது நிலவும் கடும் வறட்சியால் இந்த கிராம பகுதியில் கண்மாய், குளங்கள் வறண்ட நிலையில், கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி கூட்டு குடிநீரும் சப்ளை இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் உட்பட வீட்டு உபயோகத்திற்கான தண்ணீரும் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


மேலும் வீடுகளில் கால்நடை வளர்ப்போரின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. தினமும் 3 கி.மீ., வரை சென்று கிழக்கு கடற்கரை சாலை கடலுார் பகுதியில் தண்ணீர் சேகரித்து வந்த நிலையில், அப்பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட யூனியன் அதிகாரிகள் அப்பகுதிக்கு குடிதண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X