| டூவீலர் மோதி இருவர் காயம் Dinamalar
டூவீலர் மோதி இருவர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:17

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணபதி 56. கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளராக பணியாற்றுகிறார்.முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி விட்டு சாலையை கடந்த போது டூவீலரில் எதிரே வந்த கீரனுாரை சேர்ந்த செந்தில் மகன் பரத் 19, ஐயப்பன் மகன் பாலமுருகன் 17, முதுகுளத்துார் சென்றபோது எதிர்பாராவிதமாக மோதினர்.இதில் கணபதி, பரத் இருவருக்கும் தலையில் பலத்த காயமடைந்து முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எஸ்.ஐ.,கோடிஸ்வரன் விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X