| 2 நாளில் 3 லட்சம் பக்தர் வெள்ளியங்கிரியில் தரிசனம் Dinamalar
2 நாளில் 3 லட்சம் பக்தர் வெள்ளியங்கிரியில் தரிசனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:23

தொண்டாமுத்துார்:சித்ரா பவுர்ணமியை ஒட்டி, வெள்ளியங்கிரி மலையில், கடந்த இரு நாட்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில், வெள்ளியங்கிரி மலையில், ஏழு மலைகளுக்கு மேல், கிரிமலையில் சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசிக்க, 4 மாதங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்தாண்டு, கடந்த பிப்., முதல் பக்தர் அனுமதிக்கப்படுகின்றனர்.


சித்ரா பவுர்ணமியை ஒட்டி, வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடந்த இரு நாட்களில் மட்டும், வெள்ளியங்கிரி மலைக்கு, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் வந்தனர்.கடும் குளிரிலும், வெயிலிலும், கரடுமுரடான பாதைகள் வழியாக சென்று, ஈசனை தரிசித்து வரும் பக்தர்கள் முகங்களில், அளவில்லாத ஆனந்தத்தை காண முடிந்தது. வேண்டுதலோடு வந்த பக்தர்கள், வேல்களை கிரிமலை வரை எடுத்துச் சென்று, காணிக்கையாக்கினர்.கடந்த மூன்று நாட்களாக, மேற்குத்தொடர்ச்சி மலையில், இரவு நேரங்களில் மழை பெய்தது. அப்போது, பாறைகளுக்கு இடையே தங்கி, தற்காத்துக் கொண்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


தன்னார்வ அமைப்புகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், இரு நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கு, அடிவாரத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.ஒரு பக்தர் உயிரிழப்புசென்னை தலைமை செயலக இளநிலை உதவியாளர் ரத்தினமுத்து,52, நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறினார். நேற்று அதிகாலை, ஏழாவது மலையில், சுவாமி தரிசனம் முடித்தபின், உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்தார்.இவரது உடல், நேற்று மாலை அடிவாரம் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X