| சூலுாரில் இடைத்தேர்தல் தேர்தல் அலுவலர் நியமனம் Dinamalar
சூலுாரில் இடைத்தேர்தல் தேர்தல் அலுவலர் நியமனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:32

கோவை:சூலுார் சட்டசபை இடைத்தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது; தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சூலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த கனகராஜ், மார்ச், 21ல் மாரடைப்பால் உயிரிழந்தார்.


இத்தொகுதிக்கான இடைத்தேர்தல், மே, 19ல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளை (22ம் தேதி) துவங்கி, 29 வரை பெறப்படும். 30ல் வேட்பு மனு பரிசீலிக்கப்படும். மே, 2ல் வேட்பு மனு வாபஸ் பெறலாம். அன்றைய தினமே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.சூலுார் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் அலுவலராக, நகர்ப்புற நிலவரித்துறை உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், லோக்சபா தேர்தலில், சூலுார் சட்டசபை தொகுதிக்கு உதவி தேர்தல் அலுவலராக பணியாற்றியவர். உதவி தேர்தல் அலுவலர்களாக, தாசில்தார் ஜெயராஜ், தனி தாசில்தார் மீனாகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வேட்பு மனு தாக்கல் நாளை துவங்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கை, மே, 23ல் நடைபெறும். அன்று வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., சார்பில், சூலுார் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் யார் என்பது, இன்று அல்லது நாளை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X