| சத்திரக்குடி அருகே மோதல்18 பேர் மீது வழக்கு: 6 பேர் கைது Dinamalar
சத்திரக்குடி அருகே மோதல்18 பேர் மீது வழக்கு: 6 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:39

பரமக்குடி : சத்திரக்குடி அருகே தென்னவனுார் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அவரது படத்தின் மீது மை ஊற்றியதாக இரு தரப்பு இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் தென்னவனுாரை சேர்ந்த பாரதிராஜி உட்பட இருவர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு சேதமடைந்தன.


பசுமாடுகளையும் சிலர் தாக்கினர். எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா கூடுதல் போலீசாரை அனுப்பியதை தொடர்ந்து மோதல் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சத்திரக்குடி போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். பாரதிராஜீ புகாரில் தீபாகர் 23, செல்வி, அஜித், மூர்த்தி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார். தீபாகரை கைது செய்தனர். தீபாகர் புகாரில் பாரதிராஜீ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் எல். கருங்குளத்தை சேர்ந்த செல்வம் 37, வினித் 20, மனோஜ் 37, கவுதம் 20, தீயனுரை சேர்ந்த மணிவண்ணன் 37 உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தென்னவனுார் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X