| அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சவுரிய சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Dinamalar
அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சவுரிய சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:44

ராமநாதபுரம் : இந்திய படைத்துறையினரால் போர்காலத்தில், அமைதிகாலத்தில் படை வீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காவும், தன்னலமற்ற உயிர் தியாகத்திற்காகவும் வழங்கப்படும் அசோக சக்ரா விருதுக்கும், போர்க்காலத்தில் ஆற்றப்படும் அதிவீர செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்திற்காகவும், இந்திய படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோக சக்ராவிற்கு அடுத்த நிலையில் உள்ள சவுரிய சக்ரா விருதுக்கும், அதற்கு மேல்நிலையில் உள்ள கீர்த்தி சக்ரா விருதுக்கும், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இந்த விருதுகள் பெற இந்திய படைத்துறையினர், பொதுமக்கள், இயற்கை இடர்பாடுகளின் போது துணிகர செயல்களில் ஈடுபட்டவர்கள், விபத்துகளில் காப்பாற்றியவர்கள், நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றியவர்கள், தீ விபத்துக்களின் போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மனித உயிரை காப்பாற்றியவர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து மீட்டவர்கள், திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களிடமிருந்து துணிகர நடவடிக்கை மேற்கொண்டு காப்பாற்றியவர்கள் மற்றும் பிற வீர, தீர செயல்புரிந்தமைக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.


இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து ஏப்.,25க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்னை 600 084 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விருது தொடர்பான விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ அல்லது 04567-230 238 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X