| பாராக மாறி வரும் பாலம் Dinamalar
பாராக மாறி வரும் பாலம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2019
01:12
பதிவு செய்த நாள்
ஏப் 21,2019 00:51

ஆர்.எஸ்.மங்கலம் : -ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாலத்தை மது அருந்தும் பாராக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம் வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் பெரிய கண்மாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் அமர்ந்து மது பிரியர்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


மது அருந்தி போதை எறியதும் காலி மது பாட்டில்களை பாலத்தில் உடைக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மாலை நேரத்தில் பாலம் பகுதியில் ரோந்து மோற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X