| குண்டு Dinamalar
குண்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:43

ஐ.சி.எப் : பாழடைந்த வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டால் ஐ.சி.எப்.பில் சிறுமி காயமடைந்தார்.பெரம்பூர் ராஜிவ் காந்தி நகரில் பாழடைந்த கட்டடம் உள்ளது. இதன் அருகே நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஐ.சி.எப்.பைச் சேர்ந்த காயத்ரி 11 என்ற சிறுமி காயமடைந்தார்.குண்டு வெடித்த சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த காயத்ரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து ஐ.சி.எப். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டை அங்கு எடுத்து வந்து வைத்தது யார்; எதற்காக எடுத்து வந்தனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X