சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்/படம் உண்டு அதிகாரிகள் கவனத்திற்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:50

* கரடுமுரடான ரோடால் அவதிமதுரை காளவாசலில் 50 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பைபாஸ் ரோட்டின் நடுவில் மெகா சைஸ் பள்ளங்களை தோண்டி துாண்களை அமைத்து வருகின்றனர். அரசரடியிலிருந்து இச்சந்திப்பு வழியாக பைபாஸ் ரோடு திரும்புமிடத்தில் கற்கள், மண்களை குவித்து வைத்திருப்பதால் கரடு முரடாக உள்ளது. இதனால் டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். பால ஒப்பந்ததாரர்கள் அங்கு தற்காலிகமாக ரோடு அமைக்க முன்வர வேண்டும்.-பிரியா, பொன்மேனி.*


தெரு விளக்குகள் எரியுமா மதுரை மகாலட்சுமிநகரில் பல தெருக்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் முக்கிய தெருக்கள் இருள்மயமாக உள்ளது. இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை நடக்க வாய்ப்புகள் உள்ளன. மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தாட்சாயிணி, மகாலட்சுமிநகர்.*


சிக்னல் அமைக்கப்படுமா மதுரை பீ.பீ.குளம் ஐந்து முனை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகம். மேலும் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்வதால் இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி வருகிறது. மேலும் வேகமாக சந்திப்பை கடந்து செல்ல முயற்சிக்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. இங்கு தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ேஹமா, பீ.பீ.குளம்.*


ஆக்கிரமிப்புகளால் அவதி மதுரை புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே அழகர்கோவில் ரோட்டில் நடைபாதை வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்கள் செல்வதில் இடையூறு உள்ளது. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகனங்களை முறையாக ஒரு புறம் நிறுத்தவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பால்ராஜ், சர்வேயர்காலனி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X