| வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோமா? மக்கள் நீதி மையம் கண்டனம் Dinamalar
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோமா? மக்கள் நீதி மையம் கண்டனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
04:11

புதுச்சேரி: தேர்தலில் வாக்காளர்களுக்கு மக்கள் நீதி மையம் பணம் கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல் பதிவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் நீதி மைய மாநில தலைவர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:பணநாயகத்தால்தான் நாட்டில் ஜனநாயகம் அழிந்து வருகின்றது.இதை நன்கு உணர்ந்த கமல்ஹாசன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற முடிவு எடுத்து, கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகின்றார். அவரின் உத்தரவை ஏற்று புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற முழக்கத்தை பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் தெரிவித்தோம். வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்தோம். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் மக்கள் நீதி மைய வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.குறிப்பாக கிராம மற்றும் நகரப்புற பெண்கள் மக்கள் மையத்திற்கு ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் பெயரையும், புகழையும் தடுக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில், புதுச்சேரியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளுடன் இணைந்து மக்கள் நீதி மையமும் வாக்காளர்களை பண மழையில் நனைத்திருக்கிறது என்று ஆதாரப்பூர்வமற்றசெய்திகள் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் பொய்யானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உண்மைக்கு புறம்பான செய்தியை உடனடியாக சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X