| சாய்வான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி Dinamalar
சாய்வான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
04:12

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் வயல்வெளி சாலையின் உள்ள மின்கம்பம் சாய்வாக உள்ளதால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் அவதியடைகின்றனர்.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள வயல்வெளி சாலை வழியாக பாக்கம் கூட்ரோடு, வெள்ளாழங்குப்பம், கோண்டுர் கூட்ரோடு, ராமரெட்டிகுளம், புதுச்சேரி, கடலுார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் நுாற்றுாக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு இந்த சாலை வழியாக உரங்கள் கொண்டு வரப்படுகின்றன. விளை நிலங்களில் அறுடடை செய்யும் விளை பொருட்களையும் இந்த சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பம் சாய்வாக உள்ளது. இதனால் மின் கம்பிகள் சாய்வாகவும் காணப்படுவதால், விளை பொருட்களை வாகனம் மூலம் கொண்டும் வரும் விவசாயிகள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் திக்., திக்., என அச்சத்துடன் செல்கின்றனர்.ஆகையால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி வடுக்குப்பம் வயல்வெளி சாலையில் சாய்வாக உள்ள மின் கம்பத்தை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X