| பெண்கள் சாலை மறியல் Dinamalar
பெண்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
06:59

அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில், தேர்தலின் போது, வி.சி., பா.ம.க.,வினர் இடையே தகராறு ஏற்பட்டது. வி.சி., கட்சியினரின் வீடுகளை, பா.ம.க.,வை சேர்ந்த கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. இருதரப்பினரும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வி.சி., தரப்பில் ஆறு பேரும், பா.ம.க., தரப்பில் நான்கு பேரும், தனியார் 'டிவி' நிருபரும் காயமடைந்தனர். இது குறித்து, வி.சி., குணசீலன் கொடுத்த புகார் படி, பா.ம.க.,வை சேர்ந்த, 12 பேரை, செந்துறை போலீசார் கைது செய்தனர்.பா.ம.க., யசோதா கொடுத்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கைது செய்யப்பட்டவர்களின் தரப்பை சேர்ந்த பெண்கள், 150 பேர், நேற்று காலை, 11:30 மணிக்கு, பொன்பரப்பி பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த, அரியலூர், எஸ்.பி., சீனிவாசன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதிஅளித்ததால், மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இருவர் கைதுபெரம்பலூர் மாவட்டம், அசூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், 22, ராஜேஷ்குமார், 23, ஆகியோர், வி.சி.கட்சியினரை தாக்கியவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் அவதூறாக பேசி, சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர். இருவரையும், போலீ சார் கைது செய்தனர்.


 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X