தொடர் மழையால் உயர்கிறது 'சிரிக்கிறாள்' சிறுவாணி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2019
02:15
பதிவு செய்த நாள்
ஏப் 21,2019 23:19

கோவை:கோடை மழை காரணமாக, சிறுவாணி மற்றும் பில்லுார் அணைகளின் நீர் இருப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. குடிநீர் வினியோகத்தில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளதால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு பிப்., மாதம் முதல், கோடை வெயில் தகிக்க துவங்கியது.


இதன் காரணமாக, கோவையின் குடிநீர் ஆதாரங்களான பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகளின் நீர்மட்டம், வெகுவாக குறைந்தது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர்.கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், சிறுவாணி அணையில், 15.1 மீட்டர் உயரத்துக்கு, 650 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை சீசனில், அணை நிரம்பியது.அதன்பின், மூன்று மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியது. குடிநீர் தேவைக்காக, தினமும், 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் சரியத்துவங்கியது.கோவை மாநகராட்சியில், 15 நாட்களுக்கு ஒருமுறை என, குடிநீர் வினியோக நேரம் குறைக்கப்பட்டுள்ளது.


இப்படி குறைப்பதால் மட்டுமே, மே மாதம் வரை குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க முடியும் என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, சிறுவாணி பகுதிகளில், 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சிற்றருவிகளில் நீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. அணையின் சுற்றுப் புறங்களில் குளுமையான சூழல் நிலவுவதால் நீர் ஆவியாவது குறைந்ததுள்ளது.பில்லுார் நிலவரம் எப்படி?இதேபோல், கோவையின் மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லுார் அணையில், போதிய நீர் இருப்பு உள்ளதால், கோடை காலத்தில் கோவை மாநகருக்கு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பில்லுார் அணையின் உயரம், 100 அடி. கோவை மாநகராட்சிக்கு முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும், 165 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோவை மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சூலுார், பல்லடம் ஆகிய பகுதிகளின், குடிநீர் ஆதாரமாக பில்லுார் உள்ளது.தற்போது, அணையில், 86.5 அடி தண்ணீர் உள்ளது.


அணைக்கு வினாடிக்கு, 25 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், கோடை காலத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்கின்றனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.இன்னும் ஒரு சில தினங்களுக்கு, கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அணை யின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X