இந்த வாரம்...ஆரவாரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:21

பொதுத்துறையில் ஆளுமைவரலாற்றின் ஒவ்வொரு எழுச்சிகளும், சிறந்த ஆளுமைகளின் தலைமையால் எழுதப்பட்டவையே. பாரதீய வித்யா பவனின், 165வது சிந்தனை அரங்கத்தில், 'பொதுத்துறையில் ஆளுமை' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.பவன் வளாகம், ஆர்.எஸ்.புரம். 0422- 254 2481


கீதை காட்டும் பாதைமனித வாழ்வை ஆராதித்த, வாழ்வதற்கான வழிகளை எடுத்துரைக்கும், அறிவுக்களஞ்சியம் பகவத்கீதை. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கீதாச்சாரம் என்ற தலைப்பில், 'பகவத் கீதை உண்மையுருவில்' எனும் புத்தகத்தின் அடிப்படையில், இன்று மாலை, 6:00 மணிக்கு பயிலரங்கு நடக்கிறது.வெங்கடலட்சுமி திருமண மண்டபம், ராமநாதபுரம். 8412 70925

மாணவர்களுக்கு வழிகாட்டிதனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதன் வாயிலாக, பொறியியல் துறையில் நிச்சயம் சாதிக்கலாம். பொறியியல் படிப்பு குறித்து, மாணவர்கள் அறிந்கொள்ளும் வகையில் ரத்தினம் கல்லுாரி சார்பில் பயிலரங்கு நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் பயிலரங்கில், உங்கள் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.ரத்தினம் டெக்சோன், ஈச்சனாரி.

0422 - 404 0900

உணவு பயிலரங்குவண்ணங்களில் மயங்கும் குழந்தைகளுக்கு, கவர்ச்சியான துரித உணவுகளின் பாதிப்புகள் தெரிவதில்லை. ஆரோக்கியமான புதிய உணவுப்பண்டங்களை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். கேக் மை டேவில், காலை, 10:30 முதல் மாலை, 5:30 மணி வரை மேக்கரான் பேக்கிங் பயிலரங்கு நடக்கிறது.ராமலிங்கா நகர், சாய்பாபா காலனி.

95667 18113.

கலையின் படைப்புமனிதன் படைத்த கலை என்றில்லாமல், கலை படைத்த மனிதன் என்ற பார்வையில் சிந்தித்தால், கலைகளின் வலிமை புரியும். கலை எவ்வாறு உலகை படைத்தது என்ற பிபிசி ஆவணப்படம், கலை மீதான உங்கள் தேடலுக்கு வழிகாட்டும். ஆர்ட் ஹவுஸ் சார்பில், மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.ஆர்ட் ஹவுஸ், ஜென்னிஸ் ரெசிடென்சி, அவிநாசி ரோடு. 0422- 4335 777

ஏப்.,26: முரல் ஓவியங்கள்தொன்மை வரலாறு கொண்ட, தமிழக நுண்கலையை கோவில்களில் நிலைத்திருக்கும் சுவரோவியங்கள் உணர்த்தும். வாணவராயர் பவுண்டேஷன் சார்பில், தமிழக சுவரோவியங்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவு மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.புரந்தரதாசர் கலையரங்கம், ஆர்.எஸ்.,புரம்.

9942986668

ஏப்.,26: பேஷன் கண்காட்சிபேஷன் உலகில் புதுமை விரும்பும் பெண்களுக்காக, நவீன கலெக் ஷனுடன் வந்துவிட்டது, 'பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி. பேசனிஸ்ட்டா சார்பில், ஏப் 26., முதல் 28ம் தேதிவரை கோவையில் நடக்கிறது. காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்டு ரசிக்கலாம். அனுமதி இலவசம்.ஓட்டல் தாஜ் விவாந்தா, ரேஸ்கோர்ஸ். 92096 00200

ஏப்.,28: கொண்டாட்ட ஓட்டம்இந்த கோடைவிடுமுறையில், உங்கள் குழந்தைகளுக்கு குதுாகல கொண்டாட்டத்தை பரிசளியுங்கள். பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், குழந்தைகளுக்கான பேன்சி ஓட்டப்பந்தயம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு துவங்கும் ஓட்டப்பந்தயத்தில், பெற்றோர்களும், பேன்சி ஆடைகள் அணிந்துகுழந்தைகளும்கலந்து கொள்ளலாம்.ரேஸ்கோர்ஸ் 9047048422.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X