இன்று தினமலர் அலுவலகத்தில் மூலிகை செடிகள் வினியோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:22

கோவை:உலக புவி தினத்தை முன்னிட்டு, கோவை 'தினமலர்' நாளிதழின் சுந்தராபுரம் அலுவலகத்தில், இன்று காலை 9:30 மணிக்கு, மூலிகை செடி கன்றுகள், இலவசமாக வினியோகம் செய்யப்பட உள்ளன. 'தினமலர்' நாளிதழ், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.புவி வெப்பமயமாவதால், பசுமை பரப்பு குறைந்து, உலகில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.


இந்நிலையை மாற்றி, மீண்டும் பழைய நிலைக்கு பூமியை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக, ஆண்டுதோறும் ஏப்.,22ம் தேதி(இன்று), உலக புவி தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக, மூலிகை செடிக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.துளசி, அக்கிரகாரம், துாதுவளை, இன்சுலின், மென்தால், ஆடாதொடை, கற்பூரவல்லி, நொச்சி, தவசிக்கீரை, பிரண்டை, பூனை மீசை, சித்தரத்தை, வெற்றிலை ஆகிய மூலிகை செடிகள் வழங்கப்பட உள்ளன.முதலில் வரும் 500 பேருக்கு, ஒரு நபருக்கு, ஒரு செடி வீதம் வழங்கப்படும். மருத்துவ பயன்கள் தரும் மூலிகை செடிகள், தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.


அதிக ஆக்சிஜனை வெளியிடும் துளசி செடிகள், அதிகம் வழங்கப்படுகின்றன. சர்க்கரை பாதிப்பை குறைக்கவும், இவை பேருதவியாக இருக்கும்.''குழந்தைகள் மத்தியில், மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பாக, இந்த மூலிகை செடிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்று, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X