| பெண்கள் சாலை மறியல் Dinamalar
பெண்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:28

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முத்தரையர் நகரைச் சேர்ந்த பெண்கள் நேற்று மதுரை ரோட்டில் சாலை மறியல் செய்தனர். சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள் மறியல் செய்தனர். ஏ.டி.எஸ்.பி., முகமது அஸ்லம், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மக்களை சமாதானம் செய்தனர். இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.காரியாபட்டி: இதேபோல் காரியாபட்டியில் அச்சமுதாயத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் முக்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக சென்று, இழிவுபடுத்தி பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும், சமுதாய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என காரியாபட்டி போலீசில் புகார் மனு கொடுத்தனர். அதன்பின் பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X