டெலிபோன் ரோட்டில் அரைகுறை பணி; அல்லல்படும் அருப்புக்கோட்டை மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:30

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதியில் நின்ற பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியால், பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.



அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு மற்றும் பழைய தேவாங்கர் கலை கல்லுாரி ரோடு நடக்க முடியாத அளவிற்கு சேதமடைந்து இருந்தது. ரோட்டை புதுப்பிக்ககோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், டெலிபோன் ரோடு, பழைய தேவாங்கர் கல்லுாரி ரோடு உட்பட ரோடுகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க 2 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வந்ததால், அவசர அவசரமாக டெலிபோன் ரோட்டில் ஒரு பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. பழைய தேவாங்கர் கல்லுாரி சாலையில் அரைகுறையாக கல் பதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் கல் பதித்து 'பேக்கிங்' செய்யாமல் பாதியில் விட்டதால், பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் ஒவ்வொன்றாக கழன்று விட்டது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கற்களுக்கு இடையே 'டயர்' சிக்கி விபத்து ஏற்படுகிறது.அரசு கோடிக் கணக்கில் பணம் செலவழித்தும், அரைகுறையான பணியால் யாருக்கும் பயனில்லாமல் உள்ளது. பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இடைவெளியுள்ள கற்களால் தடுக்கி விழ வேண்டியுள்ளது. நகராட்சி அதிகாரிகளும் பணிகள் குறித்து ஆய்வு செய்வது இல்லை. விரைந்து பணிகளை முடிக்க ஒப்பந்தகாரரை அறிவுறுத்துவதும் இல்லை. பணிகளை முடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X