குடிநீரில் கழிவுநீர்; ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி; பிரச்னைகளின் பிடியில் ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் பகுதி மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:33

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலவும் சுகாதாரகேடு, போக்குவரத்து நெருக்கடி, ஆக்கிரமிப்புகளால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



ஸ்ரீவில்லிபுத்துார் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, வங்கிகள், காய்கறி மார்க்கெட், மெட்ரிக்., பள்ளி ஆகியவை அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் ரோட்டின் இருபுறமும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் டுவீலர்கள் கூட எளிதில் வர முடியாத நிலை இருக்கிறது. அவசரக்காலங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பஜார் வீதியிலுள்ள கழிவுநீர் வாறுகால்களில், கடைகளின் கழிவுகள் கொட்டப்படுள்ளதால், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தபடுவதால் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. பீக் ஹவர்சில் பஸ்கள் வரிசை கட்டி நிற்கிறது. இதனை கருத்தில் கொண்டு புறநகர் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சர்ச் வழியாகவே சென்று விடுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்டினை சுற்றியுள்ள பல்வேறு தெருக்களில் நாளுக்குநாள் சுகாதாரகேடும், போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருவதால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



டுவீலர்களால் தொல்லை:


பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தாறுமாறாக டுவீலர்கள் நிறுத்தபடுவதால், ஆட்டோக்களே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலன புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் சென்று விடுகிறது. முதியவர்கள், நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு எளிதில் அழைத்து செல்ல முடியவில்லை. இதனை நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.-போஸ், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்நகரின் மையப்பகுதியில் பஜார் வீதியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. பல வணிக நிறுவனங்கள் தங்களின் பொருட்களை நடைபாதை ஆக்கிரமித்து செய்து வைத்துள்ளதால், பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. இதனால் நகைக்கடை பஜாரில் நடக்கக் கூட முடியாத நிலை இருக்கிறது. இதனை சரி செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.-நித்தியானந்தம், ஸ்ரீவில்லிபுத்துார்.ரோட்டில் ஓடும் கழிவுநீர்பஸ் ஸ்டாண்ட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தினசரி துப்பரவு பணி நடக்காததால், கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிலும் பென்னிங்டன் வணிக வளாகத்தின் முன்னுள்ள கழிவுநீர் வாறுகால்கள் சிமென்ட் சிலாப்புகள் மூடபட்டுள்ளதால், அதில் கடைகளின் கழிவுகள் கொட்டபட்டு, நிறைந்து காணப்படுகிறது. இதனால் சிறுமழை பெய்தாலே, ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றத்துடன் தான் மார்கெட்டிற்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கமுடிகிறது.-ராஜேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்துார்.



குடிநீருடன் கலக்கும் கழிவுகள்


ரோட்டின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி குடிநீர் செல்லும் குழாய்கள் அடிக்கடி உடைந்து விடுவதால், குடிநீருடன் கழிவுகள் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் பாதுகாப்பற்ற தண்ணீரையே மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனை அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சரிசெய்தாலும், தொடர்ந்து குழாய் உடைப்பு என்பது தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருக்கிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். -தங்கமாரி, ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X