| துாசி பறக்கும் ரோடு Dinamalar
துாசி பறக்கும் ரோடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:34

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மெயின்ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது துாசிகள் பறப்பதால், பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் பஜாரிலிருந்து அரசு மருத்துவமனையுள்ள ரோட்டின் இருபுறமும குப்பைக்கழிவுகள் பரவி கிடக்கிறது. ரோட்டின் இருபுறமுமுள்ள வாறுகால்களில், குப்பைக்கழிவுகள், மண்குவியல்கள் பரவி கிடக்கிறது. இப்பகுதியில் தினசரி துப்பரவு பணிகள் நடக்காததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோட்டில் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது, துாசிகள் பறப்பதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, தினமும் துாய்மைப்பணியை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X