| கோடை உழவு செய்யுங்க Dinamalar
கோடை உழவு செய்யுங்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:35

விருதுநகர் : விருதுநகரில் கோடை உழவு செய்தால் நிலத்தில் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் வீரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' கோடை காலம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் விவசாயிகள் கோடை உழவு செய்வது நல்லது. கோடை உழவு செய்வதால் ஏற்படும் அதிக காற்றோட்டத்தால் மண்ணில் உள்ள பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள், களைகள், முந்தைய பயிர்களின் வேர்களில் இருந்து வெளிப்படும் ரசாயனங்கள் சிதைக்கப்படுகின்றன. மேலும் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன், மழைநீரோடு கலந்து மண்ணுக்குள் செல்வதால் மண்ணின் அங்ககசத்துகள் அதிகரிக்கிறது.அதனால் மண்வளம் மேம்படுகிறது. களைகள் கட்டுபடுத்தப்படுகின்றன. பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகளின் கூட்டுப்புழுக்களை வெளிக் கொணரப்பட்டு அவை பறவையினங்களுக்கு உணவாக்கப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைந்து மண்ணின் தன்மை மாறுபடுகிறது. இப்படி உழுவதால் மழைநீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ., முதல் 15 செ.மீ., வரை ஆழத்துக்கு உட்செல்லும். இதனால் நீர் ஆவியாதலை தடுப்பதோடு வறட்சி காலங்களில் பயிர்க்கு தேவையான நீர் கிடைக்க ஏதுவாகிறது. கோடை உழவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே கோடையில் பெய்யும் மழைநீரை கொண்டு கோடை உழவு செய்து நிலத்தை பயன்படுத்துவதுடன் பயிர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் படைப்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.''

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X