மரங்கள் இருக்குமிடம்; மகிழ்ச்சி நிலைக்குமிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:35

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்த மரங்களால் காற்று குளுமையாக வீசும். நாளடைவில் புதிய குடியிருப்பு , விவசாயத்திற்கு என பெரும்பாலான மரங்களை அழித்தனர். முடங்கியாறு ரோடு, சத்திரப்பட்டி ரோடு, சங்கரன் கோவில் ரோடு, மதுரை ரோடு என பல்வேறு பகுதிகளில் நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை ரோட்டை அகலப்படுத்துகிறோம் என அகற்றி விட்டனர்.



தற்போது மீதம் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்தும், விளம்பர போர்டுகளை தொங்க விட்டும் அழித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனத்தால் இதே நிலை தொடர்ந்து வருகிறது. சுற்றுப்புறச் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணியாக காற்று மாசு இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து இயற்கை சமன்பாட்டை மீட்க ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது, தேவைப்படும் தன்னார்வ அமைப்புகள், தனிநபருக்கு இலவசமாக மரக்கன்றுகள் தருவது, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் மரம் வளர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொடர் முயற்சியால் ரோட்டோர இடங்களில் நிழல் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருவதால் பசுமை மெல்ல எட்டிப்பார்க்கிறது.



மூலிகை செடிகளை வளர்ப்போம்சுற்றுச்சூழல் மாசு, அதற்கான காரணிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். சிதோஷ்ண நிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் போன்றவற்றால் பிரச்னைகள் அதிகரித்துள்ளது. போதிய எண்ணிக்கையில் மரங்கள் இல்லாததே இதற்கான காரணம். எனவே ஒவ்வொருவரும் பசுமையை பரவலாக்கும் முயற்சியாக வீடுகளில் காய்கறி செடிகள், மூலிகை வகைகளை வளர்க்க முயற்சிக்கலாம். இதன் மூலம் சுவாசத்திற்கு சுத்தமான காற்று கிடைக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாசில்லா நிலையை ஏற்படுத்தலாம்.-மணிகண்டன், பசுமை ஆர்வலர், செட்டியார்பட்டிபறவையினங்களுக்கு பயன்படட்டும்இங்குள்ள புனல்வேலி கண்மாய் இடையே செல்லும் புத்துார் ரோட்டினை அகலப்படுத்தும் போது ஏற்கனவே இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இந்த பாதையில் செல்வோர் வெப்பத்தின் தாக்கத்தால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகினர். எனவே தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் தேவதானத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தலைமலை நாடார் சார்பில் இரண்டு வருடங்களுக்கு முன் மரக்கன்றுகளை நட்டோம். பறவைகளுக்கும் பயன்படும் விதமாக நாவல், விலாம், அரசு வேம்பு, புங்கன் போன்ற மரங்களை நட்டுள்ளோம். தற்போது ஆள் உயரத்திற்கு வளர்ந்து மனதிற்கு இதமளிக்கிறது.-முரளிதரன், தளவாய்புரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர், செட்டியார்பட்டி

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X