அதிவேகம்... அதிக சப்தம்... தூக்கத்தை கெடுக்கும் குடிநீர் டேங்கர் வண்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
00:21

காரியாபட்டி : அதிகாலையில் அதிக ஹாரன் சப்தத்துடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் வேகமாக வரும் குடிநீர் டேங்கர் வாகனங்களால் துாக்கம் கெடுகிறது. விபத்து அபாயமும் உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.



மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, போதிய குடிநீர் திட்டங்கள் இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. சில இடங்களில் மாதக்கணக்கில் சப்ளை செய்ய முடியாமல் குடிநீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், மக்களின் தேவையை அறிந்த தனியார் நிறுவனங்கள் மினரல் பிளான்ட் ஏற்படுத்தி, மினி வேன் டேங்கரில், தெருத் தெருவாக சென்று வீடுகளில் மினரல் வாட்டர் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் புற்றீசல் போல் முளைத்துள்ளன. விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டுக் கொண்டு காலை 5:00 மணிக்கே துவங்குகின்றனர். அதிக சப்தத்துடன் ஹாரன் ஒலித்துக் கொண்டு வருவதால், அயர்ந்து துாங்குபவர்களின் துாக்கத்தை கெடுக்கிறது.



வயதானவர்கள், குழந்தைகள் திடுக்கிடும் சூழ்நிலை உருவாகிறது. ஒரு தெருவுக்குள் பல வாகனங்கள் எதிரும் புதிருமாக அதிவேகமாக செல்வதால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் தொந்தரவு கொடுக்கும் வகையில் ஒலிக்கும் ஹாரனை பயன்படுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மனதை பதைபதைக்கும் சத்தம்:


குடிநீர் வாகனம் வந்திருப்பதை அறிய அதிக சப்தத்துடன் ஹாரன் ஒலிக்கின்றனர். அதிகாலையில் மனதை பதைபதைக்கும் அளவிற்கு ஒலிக்கும் ஹாரன் சப்தத்தால் குழந்தைகள் அலறி எழுந்திருக்கின்றனர். வயதானவர்கள் பீதியடைகின்றனர். நல்ல தண்ணீர் கிடைப்பதை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் வானங்களை ஓட்ட டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அனுபவம் இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டும் நிலை இருப்பதால், விபத்து அச்சம் உள்ளது. அதிவேகம், அதிக ஹாரன் ஒலிப்பவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-செந்தில்குமார், தனியார் ஊழியர், காரியாபட்டி

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X