| பட்டமளிப்பு விழா Dinamalar
பட்டமளிப்பு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
00:23

சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ., இன்ஜி., கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். கட்டடவியல் துறை தலைவர் மகேஸ்வரன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விர்சுசா கார்ப்பரேஷன் மனிதவளத்துறை தலைவர், கீர்த்திவாசன் சிவராமகிருஷ்ணன், கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கேடயமும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பட்டங்களையும் வழங்கினார்கள். பட்டமளிப்பு விழாவில் 140 மாணவர்கள் பொறியியல் பட்டங்களை பெற்றனர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் சேவுகராஜன் நன்றி கூறினார். கல்லுாரித் தலைவர் பஞ்சுராஜன், செயலாளர் கார்வண்ணன், தாளாளர் கணேசன் மற்றும் துணை செயலாளர் விக்னேஷ்குமார் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X