குடிநீர் வாரிய லாரி ஓட்டுனர்கள். முறைகேடு! தனியாருக்கு நீரை விற்று, 'கமிஷன்' தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2019
02:50
பதிவு செய்த நாள்
ஏப் 22,2019 01:59

குடிநீர் வாரிய ஒப்பந்த லாரியில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகளுக்கு தண்ணீர் மாற்றப்படுவதால், பொதுமக்கள் லாரி தண்ணீரும் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.


குடிநீர் வாரியத்திற்கு, இது குறித்த புகார்களை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், சென்னையில், வணிக நிறுவனங்களுக்கு, குடிநீர் விற்பனையை, வாரியம் நிறுத்தி உள்ளது.குடியிருப்புகளுக்கு மட்டுமே, குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவை, 2015ம் ஆண்டில், 85 கோடி லிட்டராக இருந்தது; 2016ல் குடிநீர் வினியோகத்தை, 55 கோடி லிட்டராக வாரியம் குறைத்தது.உரிமம் ரத்துபோதிய அழுத்தம் இல்லாததால், குழாய்கள் மூலமான குடிநீர் வினியோகத்தை நிறுத்திய வாரியம், தற்போது லாரிகள் மூலம் குடிநீர் வினியோகத்தை அதிகரித்துள்ளது.குடிநீர் பற்றாக்குறை காரணமாக, தனியார் டேங்கர் லாரிகளுக்கு, குடிநீர் விற்பனையை வாரியம் நிறுத்தியது.பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் பெறப்படும் நீர், குடியிருப்புகளுக்கான குடிநீராக மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


ஏதாவது ஒப்பந்த லாரிகள், வணிகர்களுக்கு குடிநீரை விற்பனை செய்து, முறைகேட்டில் ஈடுபட்டால், உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என, குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.ஆய்வு செய்வது இல்லைஆனால், தொடர்ந்து வணிகர்களுக்கு, நுாதன முறையில் குடிநீர் வினியோகத்தில், வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அழுத்தம் குறைவான பகுதிகளில், இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைந்த லாரிகள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன.அவ்வாறு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அனுப்பபடும் குடிநீர், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்கிறதா என்பதை, வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை.இதை பயன்படுத்திக் கொண்ட வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுனர்கள், தினசரி ஒரு இடத்தை தேர்வு செய்து, அவ்விடத்திற்கு, தனியார் டேங்கர் லாரிகளை வரவழைத்து, குடிநீரை கள்ளத்தனமாக ஊற்றி விட்டு, கமிஷன் பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.அபராதம்இதன் மூலம், தனியார் டேங்கர் லாரி ஓட்டுனர்களுக்கு, டீசல் செலவும் மிச்சம், குடிநீரை சென்னைக்கு வெளியே சென்று, விவசாய கிணற்றில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலையும் இல்லை.


இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை, வாரிய அதிகாரிகள் அறிந்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.இதனால், பல இடங்களில், மக்கள் தண்ணீர் கிடைக்காமல், குடங்களை எடுத்துக் கொண்டு, வீதி வீதியாக அலைந்து வருகின்றனர்.வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுனர்கள், கள்ளத்தனமாக குடிநீரை, தனியார் டேங்கர் லாரிகளில் மாற்றி, கமிஷன் பார்க்கின்றனர் என்பது குறித்த புகார்கள், அதிக அளவில் பதிவாகி வருகின்றன. இது சம்பந்தமாக, ஒரு ஒப்பந்த லாரி உரிமையாளருக்கு மட்டும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
22-ஏப்-201917:44:06 IST Report Abuse
S.kausalya எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று வந்த பின் அரசு ஊழியர்கள் என்ன, தனியார் ஊழியர்கள் என்ன? நீ உன்னால் முடிந்தவரை சம்பாதித்த கொள், நான் என்னால் முடிந்தவரை பார்த்து கொள்கிறேன். ஆனால் இதில் ஒன்று அரசியல் வாதிகள் ஓட்டுக்கு காசு கொடுத்து கொள்ளை அடிக்கிறார்கள். மேலே சொன்னவர்கள் எல்லாம் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள். கேட்டால் அரசியல் வாதிக்கு பணம் தந்து தான் இந்த பணியிடம் பெற்றேன் என்கிறார்கள். தகுதியின் அடிப்படையில் வந்தால் எதற்காக பணம் தர வேண்டும்.? ஆக, தகுதி இல்லாதவர்கள் பணம் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களும்,. அரசியல்வாதி போல போட்ட முதலை எடுக்க ஊழல் என்று ஆரம்பித்து பின் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே முதலில் திருந்த வேண்டியது மக்களே..
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201914:34:53 IST Report Abuse
ஆப்பு ஒருத்தர், ரெண்டுபேர் ஊழல் செஞ்சா, கொள்ளை அடிச்சா கேக்கலாம். புடிச்டு உதைக்கலாம். இங்கே ஒட்டு மொத்தமா ஒரு மாநிலமே இல்லே ஊழல் சகதில உழுந்து புரண்டு கிடக்கு...அரசு, அதிகாரிங்க, மக்கள் எல்லோரும் இப்பிடித்தான்.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201914:32:14 IST Report Abuse
ஆப்பு கொஞ்ச நாள் பொறுங்க..கோதாவரி நீர் வருது.. வந்திரிச்சு...வந்துக்கிட்டே இருக்கு...
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
24-ஏப்-201901:03:21 IST Report Abuse
Manianஏம்ப்பா, கோதாவரி நதி என்று சொல்ல முடியுமா, அது கோதாவரி என்ற பெண் மூலம் வரலாமே என்ற எண்ணத்திலும் சொல்லி இருக்கலாமே ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X