| கடன் பிரச்னை: வேன் உரிமையாளர் தற்கொலை Dinamalar
கடன் பிரச்னை: வேன் உரிமையாளர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:06

செஞ்சி:செஞ்சி அருகே கடனில் வாங்கிய வேனுக்கு தவணை செலுத்த முடியாமல், வேன் உரிமையாளர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


செஞ்சி அருகே உள்ள சிறுநாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி மகன் சதீஷ், 31; இவர், கடனில் சரக்கு வேன் வாங்கி தானே ஓட்டி வந்தார். கடனுக்கான மாதாந்திர தவனையை சில மாதங்களாக செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.இதனால் மனம் உடைந்த சதீஷ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு மாடியில் தனியாக இருந்த போது துாக்கு போட்டு கொண்டார். அப்போது மாடிக்கு சென்ற சதீஷின் மனைவி கவுசல்யா, உயிருக்கு போராடிய சதீஷை, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.அங்கு சதீஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X