புதுச்சேரியில் அரசு பஸ் மோதி கடலுார் பெண் தலை நசுங்கி பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:17

புதுச்சேரி:மொபட்டை தள்ளிக் கொண்டு வந்த பெண், அரசு பஸ் மோதி தலை நசுங்கி இறந்தார்.கடலுார் முதுநகர், குட்டியாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி செல்வி,28; இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் மண் மற்றும் பீங்கான் பொருட்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்து தட்டு வண்டியில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.தட்டு வண்டியில் செல்வியை அமர வைத்து அழைத்து வர சிரமமாக இருந்ததால், அவருக்கு கனகராஜ் கடந்த வாரம் புதிதாக டி.வி.எஸ். எக்ஸ்ல் மொபட் வாங்கி கொடுத்துள்ளார்.கனகராஜர் நேற்று காலை வழக்கம்போல் தனது மூன்று சக்கர வண்டியில் ஜாடி, பொம்மைகளை ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் தள்ளிக் கொண்டு வந்தார். அவரை பின் தொடர்ந்து செல்வி தனது மொபைட்டை தள்ளிக் கொண்டு வந்தார். ராஜிவ் சதுக்கம் அருகே வந்தபோது சென்னை நோக்கி சென்ற டி.என்.21.என்.2021 பதிவெண் கொண்ட தமிழக அரசு பஸ் செல்வி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வியின் தலை மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. அதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X